சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 90
பூம்பனி

பூத்திருக்கு பூம்பனி
புன்சிரிப்பும் வருகிது
புன்முறுவல் கொள்ளினம்
கண் இமைக்கும் பொழுதினிலே
கால் முட்ட கொட்டியது
காத்திருந்து வளிக்கினம்
நகரசபை ஊழியர்கள்
நற்பணி செய்யினம்

பாலகர்கள்
பாடசாலை மாணவர்கள் பனி மனிதன் செய்து
அள்ளி எறிந்து
புள்ளி மான் போல்
துள்ளி விளையாடினம்
பனிமலையில் ஏறி
சறுக்குண்டு விழுகினம் சங்கதி வேற
பேசினம்
மனம் மகிழ்வு
கொள்ளினம்

வெண்திரையாய் வெண்மதியாய்
வெளிச்சம் வேற காட்டுது
உப்பு விளைநில பூமி
நீராய் கசிந்து
ஓடுது ஓடமாய்

நன்றி
வணக்கம்