சந்த கவி இலக்கம் 117
“மலைப்பு ”
என் அம்மாவின் தங்காள்
குஞ்சி அம்மாவை பார்த்து வியந்து போய் நின்றேன்
எண்பத்தி ரெண்டாவது அகவையில்
நினைவும் ஆற்றலும் அதிகமோ அதிகம் காலை மடித்து தரையில் இருந்தார் சுற்றி நானும் அக்காவும் அண்ணனும் தம்பியும் என் பிள்ளைகள் கணவர் கூடி
இருந்து பழைய கதைகள் கேட்டு வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தோம் அதிசயித்து நின்றோம்!
நந்திக்கடல் கடல் சார்ந்த வளம்
நாம் சிறுவர்களாய் இருந்த காலப்பகுதியில் கடல் வற்றிவிடும்
கோடையில்
உப்பு விளைந்துவிடும் வாடையில் மக்கள் தங்கள் தேவை கருதி சமையல் உப்பு அள்ளுவதை என் கண்முன்னே பார்த்தே ன் அதிசயித்தேன்
ஆனால் இந்த கோடை விடுமுறையில் கடலை பார்த்தேன் றசித்தேன் கடல் வற்றவில்லை கொழுத்த தண்ணீர்
கொழு கொழுவென இருக்கு
காரணம் எதுவென கேட்டால் முல்லைத்தீவு
பெருங்கடல் தண்ணீர் இதற்குள் வருகிதாம்
நான் கடலை பார்த்து திணறி திகைத்து போனேன்!!
நன்றி
வணக்கம்