சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___80

“கலைவாணி”

கல்வியும் கலையும்
தந்திடும் தேவியை
கூடியே நாமும்
பாடிடுவோம்!!

முப்பெரும் தேவியை
முன்னிறுத்தி
ஒன்பது நாட்கள் கொண்டாடுவோம்!!

புனிதம் புண்ணியம்
நிறைந்திடவே
நவராத்திரி விழாவை கொண்டாடுவோம்!!

சமஸ்கிருத வார்த்தையில்
சமரசமாய்
உருவெடுத்த வாணிவிழா!!

கல்வியா செல்வமா
வீரமா என தோரணயாய்
தொடுத்த விழா!!

கொலுசடுக்கி
கோலாகலமாய் ஆடி பாடி மகிழ்திடுவோம்!!

எத்தனை இரவுகள் வந்தாலும்
ஒன்பது இரவுக்கு ஈடேது

பாரெங்கும் பரவிய
தமிழரின் பார்பேற்றும் விழா வாணி விழா!!

நன்றி
வணக்கம்