சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__79

“மழைநீர்”

மழையே நீ வந்தால்
என் மனதில் மகிழ்ச்சி
உன்னை வரவேற்பேன்
மழையில் நனைந்து
மனம் குளிர்ந்து
குளிக்க ஆசை!!

வரமாய் நீ வருவாய்
தரமாய் தண்ணீர் தனை
ஊற்றிடுவாய்
சிரித்து சிளிர்த்து நிற்கும்
செடி கொடிகளை றசித்துடுவேன்!

பெய் என்றால்
பெய்யும் மழையோ
போக்கோலம் பூண்டு
கொட்டி தீர்த்து
ஆறு பெருக்கெடுத்து
அருவி வழிந்தோடி
சுற்றமெல்லாம் அடித்து
சுற்றி சென்றிடுமே!!

மழை நீர்
இல்லையேனில் மாந்தர் ஏது
மனிதன் குடிக்க
நீர் இல்லை
மிருகம் குடிக்க
நீர் இல்லை
மரங்கள் வாடி
நின்றனவே
மனங்கள் தளர்ந்து
போனதுவே!!

நன்றி
வணக்கம்