சந்த கவி இலக்கம்…72
” பிரிவு துயர்”
ஆற்றலுள்ள பெண்ணிவள்
ஆழுமைகள் பல கண்டேன்
அஞ்சாத நெஞ்சம் கொண்டவள்
ஆணவம் கன்மம் மாயையின் ஊற்று!!
மனம் திறந்து பேசிடுவாள்
மங்கைகளுக்கு
தன்னம்பிக்கை ஊட்டிடுவாள்!!
இணையருடன் இணைந்தே வாழ்ந்து
இணையை இணையாய் பிரிந்தவள்
துணையிடம் துணையாய் சென்றிட்டாள்
இணையர் என்ற சொல்லை
எம்மிடத்தில் விதையிட்ட அக்காவே!!
சாவுமணி அடித்தாலும்
சாவாலாக வாழ்ந்திங்களே
சங்கதிகள் சொன்னீங்களே ஊர்ரெல்லாம்
உங்கள் பேச்சு
முச்சு மட்டும் நிண்டு போச்சு!!
நன்றி
வணக்கம்