கவி இலக்கம்_89
மார்கழி
மனதுக்கு மகிழ்வு
மாந்தர் நாம் கூடி
மகிழ்வான விடுமுறையை
மகிழ்ந்திடும்
மாதமது மார்கழி
ஒளி ஏற்று மாதமது
ஒற்றுமையை
உணர்த்தி
நத்தார் விளக்குகள்
விதம் விதமாய்
ஒளிர்ந்திடும்
மனதுக்கு மகிழ்வும் தந்திடும்
பணி இடங்களில்
பல வகையான
உணவுகள்
விருந்தோம்பல்களும்
விதம் விதமாய்
கிடைத்திடுமே
பதின்மூன்று மாத உதவுதொகையும் பக்குவமாய் கிடைத்திடும்
குளிரை தணிக்க
குளிர்காலத்தை
ஈடு செய்ய
நிலக்கடலை மணலில் வறுத்து உண்ட சுவையும்
இன்றுவரை நினைவிருக்கு
அந்த சுவை நிலக்கடலை இன்றில்லை
சளி காய்ச்சலை
அகற்றிட
விதம் விதமாய்
தோடம்பழம்
மார்கழியில் கிடைத்திடுமே
காத்திருந்த மாதம்
கண்ணயர்ந்து
தூங்கும் மாதம்
கார் இருளை
கடந்து சென்று மார்கழியை மன மகிழ்வுடன்
வழியனுப்பி வைத்திடுவோம் .. புத்தகவை ஆண்டை வரவேற்றிடுவோம்
நன்றி
வணக்கம்