சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__71

” வீட்டுதோட்டம் ”

வாழை மரம்
வாசல் முன்பு நின்று
வரவேற்பு கூறுது
வெட்ட வெட்ட தழைக்கிது
விந்தை வேறு காட்டுது
குளிரை கண்டதும் கூனி குறுகிது
வெயிலை கண்டதும்
வீரம் வேறு பேசுது!!

றோஜா மலர்கள்
அழகாய் பூத்து குலுங்கிது
தேனிகள் வட்டமிட்டு
வண்ண இசை இசைக்கிது
வாசனையும்
மூக்கை துளைக்கிது!!

வெங்காயம் பூத்திருக்கு
புதிசாய் பிடுங்கி
வறை சமைத்து
சுவைத்து சாப்பிட்டேன்!!

வழி ஓரத்து
தோழிகளுக்கும் கொடுத்து மகிழ்ந்திடுவேன்!!

தக்காளி மழையை தாக்கு பிடிக்கிது
வீற்றுட் வீச்சாய் வருகிது
முள்ளங்கி முன்னோக்கி செல்லுது
முளைகீரை
நறுமணத்துடன்
நாவூற சமையலிட்டேன்
குத்து பயிற்றை
குதுகலமாய் கூச்சல் போடுதே
குதுகலமாய் இருக்குது
என் வீட்டு தோட்டமது!!
நன்றி
வணக்கம்