சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__70

” பாமுகம்”

வெள்ளி விழா காணும் பாமுகமே
பாரெல்லாம் உன்னொளி
பட்டொளி விசுதே
வானொலியாய் வட்டமிட்டாய்
வான்பரப்பை சுற்றி வந்தாய்!!

விடிவெள்ளியாய் ஒளி பரப்பி
விண் மீன்களை உருவாக்கி
விண்ணதிர வைத்த
தேனமுதே தேனமுதே!!

தென்றலாய் எமையணைத்தாய்
தேசமெல்லாம்
சுற்றி வந்தாய்
ஆறாய் வழிந்தோடுகின்றாய்
ஆற்றலுடன் எம் சிறார்களை கைகோத்தாய்!!

பேச்சையும் எழுத்தையும்
எம்முள் ஊற்றெடுத்த அருவியே
உன்னை பற்றி சொல்லுரைக்க
ஒரு நாள் போதாது!!

ழொழிக்காக நீ தொடுத்த போர்
பெரும் போர்
பாமுகமே பாமுகமே
பேனா முனைப்போர்!!

பாமுக பந்தலில்
படர்கொடியாய்
படர்ந்திருக்கும்
பைங்கிளிகள்
பைந்தமிழுக்கு
சொந்தம் சொல்லுரைக்கும் அட்சயபாத்திரமே!!

நீ வாழிய பல்லாண்டு
நீ வளர்க பல்துறையில்
வாயார வாழ்த்தி நிற்கும்
வண்ணத்தி பூச்சிகளாய்…

நீ வளர்த்த குஞ்சுகளுடன்
சிறிதரன் சிவாஜினி குடுடும்பம்!!

நன்றி வணக்கம்