சந்த கவி இலக்கம் 69
“பழமை”
பாடசாலை வளாகத்தில்
பதம் பதமான நாவல் பழம்
பார்த்தாலே வாயுறும்
பார்த்து கொண்டு இருந்தே!!
இடை வேளை மணியடித்ததும்
இடைவெளி விடாது
இணை இணையாய் நின்று
நாவல் பழம் பொறுக்கி
மண்ணை வாயால் ஊதி
சுட்ட பழத்தை உண்டு மகிழ்ந்த பழமை நினைவு!!
அம்மா அம்மியில் அரைத்தெடுத்த தேங்காய் சம்பலோடு தோசை
சகோதரருடன் சேர்ந்துண்டு மகிந்த பெருமை
தேசம் கடந்தாலும் சுவை மாறாத தொன்மை!!
அப்பா கையால்
குழைத்து ஊட்டிய பழம்சோறு பழம்சோறு இன்னு இன்னும் நினைத்தால் நாவூறுதே நாவூறுதே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்