சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்___66

“அம்மா ”

அம்மா எனும்
அற்புத விளக்கு
மெழுகு திரியாய் உருகி
எமக்கு ஒளி கொடுத்து
தன்னை உருக்கியவள்!!

தன் பசி மறந்து
எம் பசி தீர்த்த தாய்
தாயில் சிறந்த
கோயில் இல்லை
தந்தைக்கு ஈடான மந்திரம் ஏது!!

சீ என்று யாரையும் சீற்றம் கொள்ளார்
பொறுமையில்
அவரை மிச்ச யாரும் இல்லை
நோய் என்று ஒருநாள் படுத்ததும் இல்லை
நொந்து போய்
யாரையும் பேசியதும் இல்லை!!

இத்தனைக்கும்
அரசியாய்
எத்தனை பேரையும் சமாளிப்பதே
அம்மாவின் வல்லமை
இருப்பதை வைத்து வாழ்ந்ததே
திறமை
திக்கேல்லாம்
உங்கள் பேச்சு
மூச்சு மட்டும் நின்று போச்சு!!

பெற்றவர்களே
தெய்வங்கள்
போற்றுங்கள்
வழிபடுங்கள்!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்