சந்த கவி இலக்கம் __63
“எதிர்ப்பு அலை ”
எரிபொருள் விலை ஏற்றம்
ஏற இறங்க பார்க்க வேண்டுமே
எங்கே எங்கே விலைகுறைவு
தேடி அலையும் மக்கள் கூட்டம்!!
சிற்றறூந்து பாவனையை குறைதிடு
மிதி வண்டி பாவனையை கூட்டிடு
மீதமுள்ள பணத்தில்
மீண்டெழுவதே
எதிர்ப்பு அலை
மாட்டெருவை உரமாக்கி
செயற்கை உரம்
சேகரித்து
சேற்றுக்குள் கால் பதித்தாலே
நாம் சோற்றுக்குள் கைவைப்போம்!
மாற்றமதை தேட
மாண்டு உளைப்போம்
சூரிய ஒளியில் இயங்கும்
சேலார்ரை இயங்க வைத்தே
மின்சாரத்தை உற்பத்தி செய்தே
மின்விளக்கை
ஒளிர செய்வோம்!!
அழுது குளறி பயன் இல்லை
ஆற்றலுடன் செயல்படு
அச்சத்தை தவிர்திடு!!
நன்றி
சிவாஜினி சிறிதரன்
15.04.22