சந்த கவி இலக்கம்___62
“குடும்ப ஆட்சி”
குடும்பாட்சி குதுகலித்த காலம் அன்று
குலறியழும் காலம் இன்று
பெரும் பான்மை இனம்
பெருக்கெடுத்து ஓடுதே
பேசி பேசி களைத்து
பெரும் குரல் எழுப்புதே!!
என்ன நடக்க போகுதோ
ஏற்றம் காணுமா
ஏமாந்த போக்கோ
ஏற்றமதில் ஜனாதிபதியை
ஏற இறங்க வைத்தது யார்?
பெரும்பான்மை
இனம் சிங்களம்
தானே!
நாம் ஏது செய்வோம்!
அன்று நாம் அழுத கண்ணீரும்
நம் குஞ்சுகள்
அழுத கண்ணீரும்
வாய்க்கால் நிரம்பி
வழிபோக்கர் கால்கழுவினர்!
இன்று சிங்கள
பெரும்பான்மை
இனம் வடிக்குதே கண்ணீர்
காத்திருந்து பார்ப்போம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.04.22