கவி இலக்கம் 88
நினைவு நாள்
கார்த்திகை நினைவேந்தல் நாள்
கார் இருளை அகற்றிய
கார்த்திகை மைந்தரின் பெருநாள்
காந்தல் மலர்கள் காத்திருந்து மலர்ந்த நாள்
கரிகாலன் படையினரை துயில் எழுப்பும்
நன்னாள்
ஒருமுறை உங்களின்
திருமுகம்காட்டி
மறுபடி உறங்குங்கள்
நமக்காய் மலர்ந்த புனிதர்கள்
நானிலம் போற்றும் சத்தியவான்கள் சரித்திரத்தின் விண்மீன்கள் சாட்டுபோக்கு சொல்லாத
சாதனை வீரன் நாள்
கொன்ற இலட்சியம் குன்றிடாத
கொள்கை வீரன் விதையிட்ட இடத்தில்
மலர்தூவி சுடர் ஏற்றி சுற்றி இருந்து வணக்கும் நினைவு எழுச்சி நாள்
நன்றி
வணக்கம்