சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__58

“விவசாயி”
உழுது நிலம்
பண்படுத்தி
விதம் விதமாய்
விதை விதைத்து
நாற்று நட்டு
நற்பயிர்களை தானியமாக்கி
நம் கையில்
தந்திடும் விவசாயி விவசாயி!!

நம் பசி தீர்த்து
நாம் வாழ வழி சமைத்த உழவனுக்கு
நாம் ஏது செய்தோம்!!

ஊக்குவிப்பு இல்லை
உதவியும் இல்லை
ஊதாசனம் செய்கின்றோம்!

படியாதவன் என்றே
பட்டம் வேறு சூட்டி
பாரபட்சம் காட்டுகின்றோம் பாரில் பதனிடும் அத்தனையும்
பட்ட கையும்
தொட்ட கையும்
உழவனே
உனப்படுத்தாதே உதாசீனம்
செய்யாதே!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்