வியாழன் கவிதை

சிவாஜினி சிறிதரன்

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவரை

கார் இருளை அகற்றிய கார்த்திகை தீபங்களே

இனத்தின் விடியலுக்காய்
இளமைக்கால கனவுகளை
மனதில் புதைத்து
இன்னல்களை அனுபவித்து

ஆற்றல்களை மண்ணில் விதைத்து
மண்ணுக்கு விதையான
வித்துக்களே
மாதம் செய்த எம் சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பு ஏந்தி வாழ்ந்தீர்கள்
நிட்சயம் போர்
வெல்லும் என்று நினைத்தீர்கள்

மனங்களில் நீங்காத இடம் பிடித்தீர்கள்
மகவுகளின் மனங்களில்
மாற்றங்கள் கொடுத்தீர்கள்
மட்டியிடாமல்
மரணத்தை
மண்ணுக்காய்
துறந்தீர்கள்
தூக்கத்திலும்
உங்கள் நினைவுகளை சுமந்து
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர
வாழ்ந்தவரை🙏🙏

நன்றி
வணக்கம்