சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்..116

வாக்கு

இறைவனிடம் கேட்பது அருள் வாக்கு
இரங்கி கேட்பது பெருவாக்கு

ஒரு செயலை செய்து முடிக்க சொல்வது சொல்வாக்கு
சாமிமார் மக்களை ஏமாற்றி சொல்வது பொய்வாக்கு

மூத்தோர் முதியோர் பெற்றவர் சொல்லும் வாக்கு காலம் காலமாக மனதில் நினைவில் இருக்கும்

பெற்றவர் மற்றவர் பிள்ளைகளை வாழ்த்துதல்
நல்வாக்கு

செல்லும் இடம் எல்லாம் சிறப்பு காண்பது செல்வாக்கு
அது அப்பாவின் பெயர் சொன்னால் அது இலகுவில் கிடைக்கும்

அரசியல் வாதிகள் போடும் தாளமும் மேளமும்
பேச்சிலும் செயலிலும் மக்களை ஏமாற்றி பெற்றிடுவது
பொய்வாக்கு
பொலிந்திடுவது கைவாக்கு!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
28.08.23