சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_87

“கனவு மெய்பட வேண்டும்”

தாய்மொழி நேசித்து
தனிதாய்மண்ணை சுவாசித்து
தமிழ்மக்களை யாசித்த
சத்தியவான்கள் நித்திய சிலிகள் கனவு மெய்பட வேண்டும்!

பேரிலே அங்கங்களை இளந்து
குண்டு மழையில் நனைந்து
குருதி சிந்தி
கூனி குறுகி
கூட்டாக சரணடைந்து
கூட்டாக காணமல் ஆக்கபட்டோர்
கைகளில் கிடைக்க கனவு மெய்பட வேண்டும்!

பிள்ளை செல்வங்களுக்காக
பட்டினி கிடந்து
பசியால் மெலிந்து
தெருவீதியில் இருந்து
விம்மி அழுது
ஏங்கி தவிக்கும்
உறவுகளின்
கனவு மெய்பட வேண்டும்!

தாய்யை இளந்து
தந்தையை பறிகொடுத்து
சொந்தங்களை பிரிந்து வாழும்
குழந்தைகளின்
கனவு மெய்பட வேண்டும்!

நன்றி
வணக்கம்