சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இல
112

“மணி”
ஆலய மணி
ஆனந்த மணி
அற்த ஒலி
அகம் மகிழும் ஒலி

காலையில் கோழி கூவி
கண்விழித்த
காலமது பொழுதது மறைந்து
ஆலம் மணி அடித்து கண்
விழிக்கும்
விந்தையாச்சு

பாடசாலை மணி
வகுப்பறைக்கு வரவளைக்கும்
பாடம் தொடங்குவதை உணர்த்தும் மணி
பாடம் முடிவடைவதை
தெரிவாக்கும்
இடை வேளைதனை இனிதாக்கும் மணி

சல் சல் வண்டி
குதிரை வண்டி
சவாரியின் போது எழுப்பும் ஒலி
மில் மில் வண்டி மிதி வண்டி மிதித்து இருக்க ஓடும் வண்டி கனமாய்
பாதை கேட்டு கணார்ரென மணி அடித்திடுமே!

நன்றி
வணக்கம்
.சிவாஜினி சிறிதரன்