சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்
109
“முள்ளிவாய்க்கால் ”

முள்ளியில்
நடந்த மும்முனைப்போரில்
முழுமையாய்
அழிந்தது எம் இனம்

கொத்து குண்டுகளால்
விமான கொண்டு விச்சுக்களால்
அழுகுரல்களும்
அவலமும் சொல்லாண்ணா துன்பதுயரத்தை அனுபவித்தனர்
எம்மக்கள்

இந்த கொடுர நாளை
நெஞ்சம் மறக்குமா?

தீயில் எரிந்து
தீயாக வேள்வியில்
கருகியது கரிகாலன் படையது

சிந்திய குருதி
சிதறுண்ட நம் மக்களை கேட்பார்யாரும் இல்லை
பாப்பாரும் யாரும் இல்லை

உலக நாடுகள் அத்தனையும்
வேடிக்கை பார்த்தார்கள்
சிங்களத்தை வேட்டையாட சொல்லிவிட்டு

யாரும் அற்ற அனாதைகளாய் முள்ளுகம்பி வேலிக்குள் அடைக்கபட்டு
சித்திர வதைக்கு உள்ளாக்கபட்டனர் முகாங்களில்

ஒரு காண் தண்ணீரில் தான்
ஒரு நாள் களியும் முகாங்களில்
முரண்பட்டு தவிப்புடன் வாழ்ந்தனர்

மண்ணுக்காய் மொழிக்காய்
இத்தனை சோகங்களை
கடந்து வந்தது
எம் இனமே
எம் சனமே!

நன்றி
சிவாஜினி சிறிதரன்