சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 108

பெற்றோர்

அன்பால் அரவணைப்பாள் பண்பால் பாசம் கொள்வாள்
பொறுமையால்
போத்திடுவாள்
என் அம்மா

ஒரு நாள் அடித்ததும் இல்லை
நொந்து பேசியதும் இல்லை
தச அவதாரத்தையும் தவமாய் பெற்றவள்
பெருமை கொள்கின்றேன் பெருவிருப்பு
டன்

எனதருமை அப்பா
வீரத்தை விதை நிலமாய் விதைத்தவர்
ஞானத்தை ஊட்டியவர்

நற்பண்பு காட்டி
நாலு இடம் போங்கோ
நாலு விசயம் அறியுங்கோ
நாநிலம் போற்ற வாழுங்கோ என அடிக்கடி
இடித்துரைப்பார்

பொறுமையாய் இருந்திடுங்கோ
பொறுத்தால் அரசு ஆள்வீர்கள்
பொங்கினால் காடு தான் ஆள்வீர்கள்
பொறுமையான வார்த்தைகளை
பொப்பிசமாய் சொல்லி வளத்தார்

அந்த பொன்மொழிகள் இன்றும் என்றும் என்னோடு வாழுது அப்பா!!
நீங்கள் இருவரும் இன்றில்லை!!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்