சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_107

“காணி”
ஆசை ஆசையாய்
தேடி தேடி
பார்த்து பார்த்து
வாங்கிய காணி

நிலத்தை அகன்று
தோண்டி கட்டிய
இல்லம்

நம் எண்ணத்தில்
நம் சிந்தனையில்
சிலிர்த்த
சிறிபவனம்
அனுபவித்து வாழ்கின்றோம்
அகமகிழ்ந்து கொள்கின்றோம்

பெரு விருப்புடன் வாழ்கின்றோம்
உறவுகளை அழைக்கின்றோம்
உண்டு மகிழ்து பேசிடுவோம்

வீட்டு தோட்டம்
விதம் விதமாய்
பூஞ்செடிகள் காய் கனிகள்
விரும்பி உண்டு
மகிழ்ந்திடுவோம்

இசைந்த அசைந்த கனவு
இல்லம் காலத்தால் அழியாதது புலத்தில்!!

பெற்றோர் தந்த காணி
பெருமை மிக்க வரம்
பேரன் போத்தி
வாழ்ந்த வீடு

பெருமை பட்டு
வாழ ஆசை !!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்