கவி இலக்கம் 104
“சுடர் ”
சுடர் விளக்கேற்றி
நாம் வாழ ஒளி
தந்த
ஒளி விளக்கை
ஏற்றி
அஞ்சலிப்புடன்
மண்டப விழாக்கள் விழாக்காணும் காலமது
நாமமதில் நிறுத்தி
நாநிலமும் போற்றி
விளக்கினை ஏற்றிடுவோம்
தன்னை உருக்கி
எமக்கு ஒளி தரும்
சுடர் விளக்கு
அற்புத விளக்கு
அணையா சுடராய்
ஒளி தந்த
உயிர் தந்த
உத்தமர் நம் பெற்றவர்
பேரொளி இன்றில்லை
அறிவொளியும்
அவர் தந்த அனுபவமொழி
ஆற்றலும் தான்
நமக்கு மிச்சம்
அணையாதபோரொளி!!
நன்றி
வணக்கம்