சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 102
“நீர்க்குமுழி”

நீர்க்குமுழி போல் வாழ்வு
நிலையற்றது என மனமோ
எள்ளளவும் எண்ணாது
கொண்ட கொள்கையென
தன்கையே தனக்கு துணை
தன்னம்பிக்கையுடன் உழைத்து
தரணியில் தலை நிமிர்ந்து
ஈகையுடன் ஈதலுடன்
வாழ்வதே வானுயர்வு

வானத்து தாரகை
நீரை சொட்டன சொட்ட
குளமதுவோ நிரம்பி வழிய
ஆறு பெருக்கெடுத்து
தண்ணீர் கடலை சென்றடையுமே

சிந்திய நீரில் நனைந்த பயிர்
கொடிகள்
சில்லென சிலித்து நிக்க
மனமது மகிழ்ந்திடுமே

நன்றி
சிவாஜினி சிறிதரன்