சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்___93

யோசி

ஒரு முறை பேச
இரு முறை யோசி
இல்லத்தில் திட் டமிடலை
இணைந்தே யோசி
இயன்ற வரை அனைவரையும்
அணைக்க யோசி

எறியும் சூத்தை
பாக்கும் தேவை என எண்ணி
ஏற்றம் இறக்கம்
இல்லாமல்
நடந்திட யோசி

சிறுமியாய் யோசித்தது
பெரியவளானதும் மாற்றம்
இளையோராய்
நினைத்தது
இடை இடை மாற்றம்
மாற்றத்தை கண்டு
ஏற்றத்தை காணு

இருக்கும் நேரத்தை
இயன்ற வரை
திட்டமிடு
திட்டமிட்ட நாட்களை பயன்னாக்கி
பண்படுத்த யோசி!!

நன்றி
வணக்கம்