தலையீடு
அறம் மறம் முறமையோடு
அளவளாவி நிற்பதற்கு-ஒரு
கட்டான கோட்பாட்டை- அங்கு
கலங்கமின்றிக் கொண்டு போக
நல்ல தலையீடு முகாமத்துவம்
தனித்துவமாய் மிளிருமானால்
தயங்காது நீ நின்று தலையீடு நன்றே
வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு
வெட்டியாய் திரியும் மனிதர்
போதைகளிற்குகள் புகுந்து விளையாடி
வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி
வன்முறை அடிதடியென்று
கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில்
கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது
ஒரு பெரும் தலையீடு
குறிப்பறிந்து செயற்பட்டு -நீ
குழுமி நின்று வழி சொல்லி- அங்கே
குற்றமொன்றும் தோன்றாமல்
உன் தலையீடு தானதற்கு
இடமளித்து செயற்படு
இடரில்லாமல் வழிநடந்து
இருள்களை நீயகற்றினால்
அதுதான் தனித்துவமான
தலையீடு.
சிவரூபன் சர்வேஸ்வரி