வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

கண்ணிய வாழ்வு..

மலர்க்கொடியொன்று
மண்ணிலே மலர்ந்து
வளர்ந்து வரும் வேளை
படரும் கொம்பொன்றைப்
பார்த்து நிமிர்ந்து படரும் வேலை
களையெடுக்க வந்தவன் -அதன்
தலையையும் எடுத்துவிட்டானே

மண்ணிலே மலர்ந்தது
மலர்க்கொடியல்லவா- அதன்
வனப்பு யாருக்குப் புரியும் -அதன்
வாசத்தை யார் தான் அறிவார்
பிச்சிப் பூவானவள்- அவள்
ஒரு பேச்சியானாள்
தரமறியாமல் நின்றதனால்- நல்ல
தரமறியாமல் அழிந்து
விடுவார்,

கனமறியாத இடமதில் நின்றால்
நல்ல மனமதுவும் உடைந்து போகும்
தினம் தினம் கண்ணீர்- என்றும்
தீராது சோகம்
இடம் பார்த்துப்பழகு- நல்ல
நிலையுன்னைத் தொடரும்
களை எடுக்கும் நிலை யல்ல ,
கண்ணிய வாழ்வு என்றும்,,

– சிவரூபன் சர்வேஸ்வரி
இலங்கை.