விடுமுறை வந்தாலே
இன்பம் கொழிக்கும் -சுகமான
இனிமை பொங்கும் -நாம்
கூடி மகிழ்வோம் என்று -ஒரு
குதூகலம் கொஞ்சும்
வீட்டில் நின்றாலே -மனம்
நிறைவு தானுமுண்டு-
விடுமுறை வந்தாலே-
இங்கு
மனம் குளிர்மையுண்டு
வேலை பளுக்கள்- அங்கு
விரைவாய் மறையும்
விருந்தினர் வருகையே- எம்
மனநிறைவைத் தரும் கொண்டாட்டம் என்று -கை
கொட்டி நிற்பார்
திண்டாட்டம் வராது -எமக்கு விடுமுறை வந்தாலே
காலை கதிரவன் கண் விழித்தால் போல்
காசினி எங்கும் இருள் நீங்கியது போல்
பவளமல்லி பூத்துக் குலுங்கியது போல்
விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்