சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

ஆறு மனமே !
*****************************

அரியாசனமேறித் தானிருந்தாலும்.
அறுசுவையுணவை உண்டிருந்தாலும்.
ஆகாயவானில் பறந்திருந்தாலும்.
ஆறாதரணமொன்று வந்திடுமே.

சுகபோகவாழ்வில் மூழ்கினாலும்.
சுகந்தக் காற்றை நுகர்ந்திடலாம்.
சோலைக் குயில் போல் பாடிடலாம்.
சோககீதமொன்று
வந்திடுமே.

ஆறு அறிவை இறைவன்த தந்திருந்தாலும்
ஆனந்தவாழ்வில் மூழ்கியிருந்தாலும்
அடுத்துக் கெடுக்கும் மனிதர் கூட்டம்.
ஆற முடியாமல் தணலாக்கி விடுவார்.

நீதி வழுவாத நெறியில் நின்றும்
நீங்காத வடுவைத் தந்து நிற்பார்.
நாதியற்றவர் நாமில்லை யென்றாலும்
ஏனோ மனமும் ஆறாமல் துடிக்கும்.
ஆறு மனமே ஆறு என்று -அந்த
ஆண்டவனை நாடுவதே மனம்.

கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி✍️✍️✍️✍️✍️✍️✍️✨️✨️✨️