வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

அகதி நாம்பெற்ற வரமா

அற நலவுருவெடுத்து – நாம்
அவனியிலே பிறந்து வளர்ந்தும்
நிலமதிர நிற்கவைக்கும்-அகதி
எனும் நிலை தானே

தெளிந்த நல் நிலவு போன்று
தேன்பாயுமருவி போன்று
விளைந்த நல் மணிகள் போன்று
முதிர்ந்த நிலை வந்தாலும்
அகதியென்று
அங்காடி போல் வந்து நிற்கும்

ஒன்றைப் பெறவேண்டுமென
ஒன்றையிழந்து நிற்கையில்
அகதி என்ற பெயருடன்
அலைபாய்ந்து நின்றிடுவோம்
அன்று இட்ட சாபம்-இன்று
இன்று பெற்றோம் வரமாய்