வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

வழிகாட்டிகள்

மலர்வுடன் மலராகி- நல்ல
மணம் பரப்பி நிற்பதற்கு
அறிவின் திறவுகோலை- நல்ல
அறமாக வழிகாட்டி நின்ற- நற்
குருவே. நீவீர் வாழி, வாழி

மாதா, பிதா, குரு தெய்வமென்று
மானிலத்தில் எழுதி வைத்தாள் ஔவையுமே
வற்றிய குளத்தினிலே பறவைகள்
தங்காது
வரண்ட பிரதேசத்திலே
புற்களும் முளைக்காது
விளைபயிருக்கு நீரில்லை யென்றால்
பயிர்களும் செழிக்காது
கற்று வழியேக , குருமாரும் இல்லை
எனில், கற்கையுமிருக்காது

அகரத்தையும் முகரத்தையும்
அழகாக அறிவூட்டி
அன்றாடக் கடமைகளில்
நில்லாது சேவை செய்து
கல்வியெனும் படகேறி
கரையேக வைப்பவரே
விண்மீனாய் திகழவைக்கும் எம்
ஆசிரியர்களே நீவீர் வாழி,வாழி

வாழ வழியும் வழமோடு நற்சேவையும்
வண்ண விளக்காய் வரம் போடும் கல்வியும்
கேடு இல் விழிச்செல்வம் கல்வி
ஒருவர்க்கு மாடு அல்ல
மற்றையவை- என்று
கூறிநின்று வழிகாட்டியவர்களே
நீவீர் வாழி, வாழி

– கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி