என்று தீரும்
நேற்று இன்று நாளையென்று
நிம்மதியற்ற தேடல்கள் நாளும்
தொலைத்தவிடத்தில் தேட முடியாமல்
தொலை தூரமெல்லாம் தேடல்கள்
கிடைக்குமென்றொரு நப்பாசை -ஆனால்
என்று தீரும் என்றொரு வேட்கை
இனிமையான காலங்களைத்
தொலைத்தனர் மக்கள்
இடர்களின் பாதைகளில் நலிந்தனர்
மெலிந்தனர்
ஈகையில்லா நிலைதனில்
வெம்பி வெடித்தனர்
ஈனங்கள் தான் சுமந்து
இருண்ட இரவுக்குள் மூழ்கினர்
தேடல்கள் மத்தியில் சுழன்று – இந்த
தேசம் விட்டு மாண்டவரு முண்டு
மணி யோசை கேட்பது போல்
குரல்கள் ஒலிக்கின்றன
கொட்டு மேளம் கொட்டுவது
போல் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது
அத்திவாரம் இல்லாமல்
கட்டிடம் எழும்புமா?
தேடல்கள் தொடர்ந்தாலும்
தீர்ப்பு தீர்வு கிடைக்குமா?
கேள்விக்குறிதானே, தேடல்களில்
நிலைகள்
இடி முழக்கம்தான் இன்நேர
வாசகங்கள்
கவன ஈர்ப்பு ,கவனி, நீ
ஈர்ப்பாக –
என்று விடியும் -என்று முடியும்
என ஏக்கங்கள் கோடி,
என்று தீரும் -என
நாளெல்லாம்?
– சிவரூபன் சர்வேஸ்வரி