வியாழன் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

அர்த்தமற்றுப் போவதில்லை வாழ்வு

வாழ்ந்து காட்ட வேண்டும்

வளமுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் தாழ்வற்ற மனமும் நமக்குத்தகுதியாக வேண்டும் வேண்டும் வேண்டும் வாழ்வு யாம் விரும்பியேற்க வேண்டும்

கஸ்டம் நஸ்டமெல்லாம்

வெறும் கனவாய் போதல் வேண்டும் இலட்சிய வேட்கை வேண்டும் சந்ததி தழைக்க வேண்டும்

சத்தியம் நிலைக்க வேண்டும் – நம்

பேர் சொல்ல வாழ வேண்டும் – என்றும்

பெருமைகள் சாதிக்க வேண்டும்.

கூடி வாழல் வேண்டும் – ஒன்றாய் குழுமி நிற்றல் வேண்டும் நாடி நிற்பதெல்லாம் நன்மை பயக்க வேண்டும்
சோம்பி விழுந்து விட்டால் – நீ எழுந்து நடக்க வேண்டும் எண்ணம்போல வாழ்வு நன்றாய் அமைவதில்லைப் பாரில் இருக்கும் வரை யாமும் – நன்றே முயன்று பார்ப்போம் வாரீர் அர்த்தமற்றது இல்லை எங்கும் ஆனந்தமிளிர்வது வாழ்வு…

– சிவரூபன் சர்வேஸ்வரி