வியாழன் கவிதை

சிவரூபன்சர்வேஸ்வரி.

கல்வியறிவில்லை எனில்..

ஏலம் போடுவதறிவுவல்ல
ஏகமானதுவுமறிவல்ல
ஏமாற்ற மடைவதும் நிலையல்ல
ஏனிப்படி மேலேறுவது போன்று
ஓடி வருவது தானறிவு.

எழுத்தறிவு இல்லாமல் மனிதன் வாழ்ந்தால்
ஏமாளியாக்கி பங்கு பிரிப்பார்
எச்சபைதனிலும் அச்சமின்றி
எடுத்துரைக்கவும் எழுத்தறிவு தேவை

கற்றபலன் சென்றவிடம் சிறக்கும்
கல்லாதவன் புகழ் குடத்தினுள் வெளிச்சம் போன்று
எழுத்தறி வென்பது மனிதனுக்கவசியம்
அதையுணர்வது மனிதனுக்கு முக்கியம்

எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகுமென
எழுத்தறிவித்தவன் இறைவனென்பார்- அதை
அறியாமல் வாழ்ந்தால்
மூடரென்பர்.

எங்கும், எதிலும், எப்போதும்
ஒப்பரவொழுகி எழுத்தறிவுள்ளவன்
நன்று காரியம் முடித்து நிற்பான்
மாண்புடன் சிறந்து மனிதனாய் உயர
எழுத்தறி வெண்பது நல்லதோராயுதம்

அறிவாயுதம் கூராகி நின்றால்
திறனாய்யுதம் தித்திப்பாயினிக்கும்
தரம் தனில் தீரம் இல்லையெனில்
பட்ட மரமொன்றிற்கு ஒப்பாகுமே..!
-கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி.