வியாழன் கவிதை

சிவருபன் சர்வேஸ்வரி

பேதையவள் என் செய்வாள்
<<<<>>>>>><<<<

நாட்டம் கொண்டாளவள் நாணலாய் வளைந்தாள்

பாட்டொன்று பாடினாள் _ அவள்
பரவசமாய் தானிருந்தாள்

முத்துப் பல்லழகியென்பார்
பத்திரை மாற்றுத் தங்கமென்பார்

கண்டபடி பேசமாட்டாள்_
அவள் கடும் கோபக்காரி யென்பார்

வித்தாரமும் வேடிக்கையும் விருப்பமில்லாக் கேளிக்கை என்பாள்

சுத்து மாற்று இல்லாமல் __என்றும் சுதந்திரமாக
வாழ வேண்டும் என்பாள்
வாட்டம் கொண்டாள் _
அவள் வாடிவதங்கி நின்றாள் _ வெளி
நாட்டு மோகத்தினால் __ அவள் நட்டாற்றில் விடவும் பட்டாள்

பேசிவைத்த திருமணமோ __ ஒரு
பேச்சறியா மூடனவன்
போதைக்குள்ளே அவன்
இருந்தான்
பேதையவள் என்செய்வாள்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி