தலைப்பூ
தலைப்பூ இல்லையெனில் -அங்கு
எல்லாம் வெறுப்பு
தலைப்பு அமைவது- அங்கு
தனித்துவமான சிறப்பு
தொடுப்பூ, எடுப்பூ, விரிப்பூ- நல்ல
பதிப்பூ அதனாலே ஒரு மதிப்பூ
சலிப்பு இல்லாமல் சந்தம் விளங்கினால்
கலப்பூ இல்லாமல் இலக்கியம் அமைந்தால்
தடுப்பு இல்லாமல் கவனிப்பூ இருக்கும்.
நினைக்கும் நினைவுகளை- நீ
நிரலாக பரப்பு- அங்கே
உனக்கிருப்பது பெரும் சிறப்பு.
கண்ணைக் கவரும் ஓவியம் ஒரு சித்தரிப்பூ
காவியத்தைப் பார்க்கும் போது
கோரம் போடுவது ஒரு அறிவிப்பூ
உண்மைகளை அறியும்போது- அங்கு
உணரப்படுவது விழிப்பூ
ஊமையின் வாய் திறந்து நின்றால்
அது ஒரு பரபரப்பூ
தலைப்பூ இல்லையெனில்
பாமுகத்திற்கு நிலைப்பூ இல்லை
அங்கு பூ முகங்களும் இல்லை
வனப்பு ,சிறப்பு பயிர்ப்பூ
வாழ வழிசெய்வது உழைப்பு
நம்மை வளம் படுத்துவது படிப்பு
நாம் பின்பற்ற வேண்டியது ஒப்புயர்வு
நல்வழிபோகுவது உயர்வு
நெறியோடு நிலை நில் மலர்வு
கட்டான கட்டோடு
கவன ஏர்ப்பாக இருக்க வேண்டும்
அதுவே நல்ல தலைப்பூ
கவிஞர்
சிவரூபன் சர்வேஸ்வரி