சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன

சந்த நிகழ்வுக்கு கவிதை. “உலை வைக்க முடியாமல்
உருக்குலைந்து விளைச்சல் எல்லாம்
நிலை தடுமாறிநின்ற நினைவு பல எனக்குள்
தலையை ஈடு வைத்தும்
தருவான் தன் கடனை
தர்மன் என்ற பேர்
தந்தைக்கு ஊரில் உண்டு
கவலை இருந்தாலும்
கையில் உள்ள எதையும்
அடகு வைத்தோ விற்றோ
அடைப்பார் கடனை
கெட்டுப் போகவில்லை
தர்மம் தலை காக்க
எட்டு பிள்ளைகளுக்கும்
எல்லாமே செய்து வைத்தார்
அமாவாசை பிதிர் கடனை
ஆற்றும் வேளையிலே
அப்பா நினைவுவர
அடிக்கடி கண் வழியும்
தலையை ஈடு வைத்தும் அடைத்தவர் கடன் அவர்”
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-