சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மேன்மை மிகு மகாராணி நாட்டின் பண நோட்டுகளில் நான் உம்மை முதல் கண்டேன்
பாட்டன் வழி அரச பரம்பரைக்கு
வாரிசென
தோற்றம் எடுத்தவரே
வாட்டம் மனதிலுண்டு
வாழ்விழந்த தமிழர்களாய்
ஆண்ட தமிழ் அரசர்களை
அழித்து ஆண்டு போகையிலே
காட்டாச்சி சிங்களவர் கையில் எம் நாடு செல்ல
காரணமாய் இருந்த வம்சம்
என்று எண்ண மனம் கனக்கும்
என்றாலும் உங்களுக்கு
நன்றி சொல்ல வேண்டும்
நாட்டுக்கு சுதந்திரத்தை தந்தவர் நீர் என்று
தாயே விடை தந்தோம்
விண்ணிலே அமைதி பெற வேண்டி