சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

எண்ணம்
எண்ணமாய் உதித்ததை
இதயத்தில் இருத்தியே
இலக்கினை அடைந்திடும் வண்ணம்
திண்ணமாய் கொண்டிடில்
சேர்ந்திடும் வெற்றியாம்
திருக்குறள் இரு வரி செய்தி. விருப்பற்ற கல்வி
பலிக்காது
வெறுக்கின்ற வேலை
முடியாது
வேண்டாத பண்டம்
சமிக்காது
பொருந்தாத மனமுள்ள
புருடன்,பெண்டில்
திருமண முறிவே
வினையாகும் முடிவில்.
எண்ணம் என்பது மனத்தில் எழுவது
இதயத்தில் இருந்து ஊற்றாய் எழுவது.
மண்ணில் வாழும்
மற்றய உயிர் இனம்
கொண்டிரா ஒன்று
மானிட பிறவிக்கு
மட்டுமே உரிய
ஆறாம் அறிவின் அரிய பொக்கிஷம்