சந்தம் சிந்தும் கவிதை

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

“மீண்டு எழு”
சந்திப்பு 238
“ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆண்டவனும்தான் மண்சுமந்து அடி வாங்கினான்
தோல்வி,தடை எல்லாம்
வாழ்வில் தொடரும் இடை இடை
சளைத்தால்,துவண்டால்
சறுக்கி விழுந்தால்
ஊட்டி எழ கைகளா இல்லை
ஒட்டிய வயிறுக்கு ஒரு கவளம்
உணவுக்கு உழைக்கவா வழி இல்லை
சோராதே துவண்டு எழு
வீறாப்பாய் எழு விறுமாண்டியாய் உழை
வெற்றி நிட்சயம்.
ஆளுனராக
அகிலம் போற்றுபவராக
அப்துல் கலாம் இருந்தாரே
அவரும் ஏழை வீட்டு மகன்தானே
அணையாத இலட்சிய வேட்கைதானே
அவரை ஏவுகணை விஞ்ஞானி என்றாக்கியது
இந்தியாவுக்கே பெருமை தர வைத்தது
மதத்தில் மதம் கொண்ட
மாற்றானும் அவரை மதிக்க வைத்தது.
வாழும் வரை போராடு
வாழ அவர் உண்டு என்றே பாடு”
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-