சந்தம் சிந்தும் கவிதை

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

சிவரஞ்சினி கலைச்செல்வன். “அலை ஓசை”
சந்த நிகழ்வு 237
“ஆழ்கடலில் இருந்து எழும்
அலை ஓசை
அதற்கு என்றும் கரை மகளை
தொட ஆசை
நீள நெடும் தூரத்தே அதன்
தோற்றம்
நில மகளை தொட அடங்கும்
அதன் ஆட்டம்
பேரழிவை தரும் சுழன்ற
பெரும் அலையாய்
பிறப்பெடுக்கும் தென்றலுடன்
துணை படையாய்
ஆழ்கடலில் பொங்கிவரும்
பூகம்பம்
அக்கினியும்,நீர் ,காற்றும்
சழன்றட
பேய் மழையை வான் பொழிய
இவை நாலும்
பிணைந் தொன்றாய்
பிறப்பது பேர் சுனாமி என்பர்
நான்கோடு மண் காணும்
பேரழிவு
நாம் கண்டோம் சுனாமியைதான்
நம் நாட்டில்
ஈதொன்றும் இனி மீளா
நிலை வேண்டும்
எங்களுக்கு ஐம்பூத
அருள் வேண்டும்”