சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ
பல்கலைக்கழகம் தெரிவாகி
பல மைல் கடந்து பயணித்து
கொல்லும் றாக்கிங் பயத்தோடு
கூட மாமா துணையோடு
சென்ற காலம் நினைவினிலே
சந்தம் சிந்தும் தலைப்பாலே!
அந்த நாட்கள் மிக இனிமை
அழகு கண்டி அதிசயமே
பேராதனையில் மலர் பூங்கா
பெரிதாய் மலைப்பை தந்ததுவே
ஆகா அதனின் எழில் எண்ண
அதனது அமைப்பை மனது எண்ண
பேனா கவிதை தான் எழுதும்
பிறக்கும் மலைப்பால்
மனம் வியக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-