சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

வீரம் விளைந்து நின்ற தேசம்
வெஞ்சமராடி புலி வென்ற எம் ஈழம்
பேரரும் பலம் கொண்ட நாட்டார்
பெரும் பலம் தந்தது அரசுக்கு கூட்டாய்
மூ அரும் படை கொண்ட புலியை
மூச்சர வைத்தனர் போரதன் முடிவில்
நாற்பது லட்சம்மேல் மாள
நம்மவர் பூமியில் ஆமியின் ஆட்சி

மீளவும் போர்திறன் சேர
மெல்ல தமிழர் மீண்டெழல் சோர
ஆள்பவர் செய்தனர் சூட்சி
ஆமிகள் மூலம் போதையை ஊக்கி
வாலிபர் வனிதையர் வாயில்
வைத்தர் கஞ்சா,கொக்ரெயின் ஆதி
காலிகள் தேசம் இன் ஈழம்
காவிகள் ஊக்குதல் ஈழமே நாசம்
சிங்களம் வைத்த தீ போதை
திரண்டிப்போ எரிக்குது தெற்கையும் பாரீர்
எங்கனும் வியாபாரம் ஆகி
இலவச வஸ்துகள் மாணவர்க்காகி
இங்கஙம் போதையில் ஊற
ஏற்ற தோர் ஊக்கம் இயல்பாக பாய
வஞ்சினம் வாள்வெட்டு களவு
வலிந்த புணர்வு இலங்கையே அதிர்வு
பிஞ்சிலே பழுத்தனர் இளைஞர்
பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் நிலைகள்