சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

விருப்பு
ஆசை ஆசை ஆசை
அழகில சுவையில் அன்பானவரில்
எப்போ காணிலும் எழுகுது ஆசை
காசை கையால் கரைப்பதும் ஆசை
கையை நீட்ட செவ்வதும் ஆசை
கடனை வாங்க செய்வதும் ஆசை
கடனில் மூழ்க்கி கவிழ்ப்பதும் ஆசை
ஆசை முளைக்க அடைய துடிக்கும்
அகப்படாவிடில் மனதை உடைக்கும்
தீதை கூட தீண்ட செய்யும்
தீயதை தீரா பழக்கம் ஆக்கும்
மண் பெண் பொன்னில்
மனம் கொளும் ஆசை
மானிடர் வாழ்வை மாய்த்திடுமென
எத்தனை எத்தனை இதிகாசங்கள்
இயம்பிடும் எமது முன்னோர் முதலாய்
ஆசையை அறு என
கூறியும் மனது
விட விருப் பின்றி
வில்லங்கம் தருதே