சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மனுநீதி தவறுகின்ற மன்னரது நாட்டில்
மண் வளமும் பொன் வளமும் மறையும் தினம் கேட்டில்
இது சரியே என்பதினினை
இலங்கை நிலை காட்டும்
இலங்கைக்கு கடன் கொடுத்த நாடு மீள கேட்க
வறுமை மிக நாடு என வங்குறோத்தை ஏற்று
வைத்ததுவே புது அரசின் சாதனையாய் பார்த்தோம்,

மோசடியை செய்ததவர்களை பதவிகளை விட்டு
முதுகில் கால் பதிய தாம்
எடுத்தார்கள் ஓட்டம்
ஆண்ட குடை கொற்றம் எல்லாம் அடியோடு வீழ
ஆள் எவரும் தேர்தலிலே வெல்லாத போதும்
தான் பிறர்கள் வாக்குகளால் எம்பியாய் ஆன
பச்சை கட்சி நரி தலைவர்
பதவியை தான் வாங்கி
மோசடியர் சண்டியர்கள் மீள தலை காட்ட
ஓட வைத்த போராளர் சிறைக்குள்ளே வட
நாடு அடைவு போ வைத்தோர்
மந்திரிகள் ஆக
நய வஞ்ச பேய்ஆட்சி
நடக்கிறது நாட்டில்.