சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மனிதா!செய் நன்றி மறந்தவனே
புனிதமான சூழலை போக்கடித்து மாசாக்கி
கரியமல வாயு விளைகின்ற காட்டை எல்லாம்
காசாக்கி நிலமாக்கி கட்டங்கள்
வானளவில்
கோபுரமாய் கட்டி
கொண்டுள்ளாய்
கொடிய நச்சு கழிவுகளை
அடுத்த நாட்டை அழிக்க அணுகுண்டை
அளவு கணை ஷெல் பொம்பர்
எத்தனையோ எத்தனையொ
நாடுகள் இடையே நடக்கின்ற போராலே
வானத்தே மாசாய் வந்து குவிகிறதே
காடுகள் எரிகிறதே காலமெல்லாம் தடுக்க
ஆவன செய்தாயா
பீச்சும் எரிமலைகள்
காற்று புயலாய்
காலமெல்லாம் எங்கெங்கோ
இயற்கை சம நிலையை இழந்த நிலை
வானத்தில் ஓட்டை
வழிந்து அவ்வழியே
கோர கடும் மழையாய்
கொட்டுவது என் தவறா
ஐம்பூதம் என்பாய்
ஆமாம் நாம் பூதம்தான்
நிலத்தை நீரை நெருப்பை
காற்றை பகைத்துவிட்டாய் வானத்தால் பார்க்கின்றேன்
மனிதா திருந்து மாறு
அளவாய் பொழிவேன்
ஆறுதலை தருவேன்
மழை நான் உன்னை மன்றாடி கேட்கின்றேன்