போனது பொற்காலம்””. கொலை கொள்ளை களவுகளும் கூடி
குடி கஞ்சா போதைகளும் ஏறி
உறவு என்ற பந்த பாசம் மறந்து
பாலரையும் சீரழிக்கும் காமம்
கலை,கல்வி பண்பாட்டில் சிறந்த
காலம் மலை ஏறி விட்ட கோலம்
இவை எங்கள் யாழ்ப்பாண நிலமை
எல்லோர்கும் சுய நலமே முதன்மை.
அரசியலே வியாபாரம் ஆச்சு
பதவி ஒன்றே இலக்காக போச்சு.
வரவு நிதம் வெளி நாட்டால் சேரும்
வாழ்வு முறை தலை கீழாய் ஆச்சு
இனி எப்போ பழைய நிலை மீளும்
எம் தலைவர் உயிர்த்து வந்தால் மீளும்
-சி.கலைசெல்வன்