சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சனி கலைச்செல்வன்

பள்ளிக்கு செல்லும் பிள்ளை
பாண் கூட கடைகளில் இல்லை
உண்ணக் கொடுத்து அனுப்ப
பாலும் விலை கூட
பாதி நாள் வேலை இல்லை
நூலும் றோல் கோட்டும் தான்
என் கழுத்தில் இப்போது
அடைவு வைக்க ஏதும் இல்லை
அடுத்தவர் நிலையும் அதுதான்
ஆரிடம் கடன் வாங்க
தன் மானம் தடுக்கிறது
இல்லாமை பிள்ளைக்கும்
ஏக்கம் கொடுக்கிறது
ஆளை பிடித்து பணம் கட்டி
அவுஸ்ரேலிய போனால்
அதிகம் உழைக்கலாம் என்று
என் கணவன் படகேறி எட்டு மாதம் ஆச்சு
எங்கே? எப்படி? இருக்கிறார் என்ற தகவல் ஏதும் தெரியாது?
ஏஜென்சியையும் காணோம்
என்ன செய்ய?
நானும் பிள்ளைகளும் உயிரை மாய்த்து நல்லதங்காள் ஆவதா?
வேறு என்ன வழி