சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சனி கலைச்செல்வன்

ஆற்றங்கரை மரமும்
அரசஆளும் முடி சிரமும்
ஆற்றோடு அடிபட்டு
போகும்..நிலைமை
அடுத்த கணம் தலைகீழாய்
மாறும்-இன்று
போற்றியவர் தூற்றுகின்ற
மாற்றங்கள் நாடுதோறும்
நீண்ட நெடு வரலாறு பாரும்.
இந்த
நீதிநெறி அறிந்தாலே நின்மதியும் தொலையாதே
பாட்டி ஒளவை சொல்லிவைத்தாள் கேளும்.பழந்தமிலே நீதி நெறி கூறும்
ஈட்டி வைத்த வெற்றிகளை
காட்டி வென்ற பதவிகளும்
வாட்டமுறும் வயிறு என்றால் மாறும்
காட்டியதெம் தாய்நாடு பாரும்.

யாழ்பாண நூலகத்தில்
ஆக்கங்கள் ஆயிரமாய்
தீக்கு இரை ஆனதும் ஓர் ஆடி.
பாழான பொக்கிஷங்கள்
படையினரால் பொசுங்க வைத்த
பாவியர் ரனிலுக்கும் பங்கு-
பதவியிலே மந்திரியே அன்று
படையினரின் துணையோடு
பல லட்சம் சிங்களவர்
பரவ வைத்த தீயாலே வெந்து
பல நூல்கள் பாழான நொந்து
பரிதவித்து அழுகின்றார் இன்று.
பட்டணத்தார் நஞ்சு அப்பம்
பற்ற வைத்த தீபோல
பற்றி எரி கின்றது தாய்நாடு
பற்ற வைத்தார் தம்மவரே பாடு