சந்தம் சிந்தும் கவிக்காக
சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு : *நிச்சயதார்த்தம்*
ஒருமையாய் கூடி
ஒன்று பட்டே
இருமனதை இணைக்க
இணையும் உறவுகள்
பெருமனதாக உள்ளம் மகிழ
பருவங்கள் பார்த்து பலமும் சேர்த்து
விருந்துகள் ஆக்கி
விருப்புகள் சொல்லி
பொருந்தப் பேசும்
பொன்னான பொழுதே
தந்தை தாயை தலைமையாய் கொண்டு முந்தை பெரியார் முன்னிலை வைத்து
மங்கலப் பொருட்களை
மறுகரம் மாற்றி
திங்களும் குறித்து
தேதியும் ஆக்கி
சங்கம மாந்தர் சபையில் கூடி
நிச்சயம் ஒன்றே நிலையெனச் சொல்லி
சத்தியம் காணும் சம்மத
நாளே.