சந்தம் சிந்தும் கவிதை

சிவதர்ஷினி ராஎகவன்

வாரம் இரு நூறு தொட்டாய்!!

வல்ல தொரு கவிக்களம்
வாய்த்ததே சந்தக்
கவிக்கு ஒரு தளம்
சிந்திவிடும் வரிகள்
சிறப்பாகும் தினம்!!

வாரம் தொட்டது
இரு நூறு
வாத்தியார் ஐயா
பாவை அண்ணன்
நேர்த்தியாய் இங்கே
வடித்த கவிகள்
சீருடன் சிறப்பும்
கண்டது பார்!!

வாழ்த்துக்கள் கூறி
வளர்க எனப் பாடி
வனப்போடு கவிஞர்
வாரமும் இணைந்தே
நாட்டுக சரிதம்
நல்மொழி அமுதென!!
சிவதர்சனி இராகவன்
15/11/2022